வரலாற்றில் இன்று – 27.11.2019 – புரூஸ் லீ

 வரலாற்றில் இன்று – 27.11.2019 – புரூஸ் லீ
வரலாற்றில் இன்று – 27.11.2019

புரூஸ் லீ
உலகப் புகழ்பெற்ற தற்காப்பு கலை வீரரும், பிரபல நடிகருமான புரூஸ் லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார்.
யிப் மான் என்பவரிடம் தற்காப்பு கலையை ஆர்வத்துடன் கற்றார். இவர் தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சொந்தமாக ஒரு நூலகமே வைத்திருந்தார்.
சீன தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில், தற்காப்பு பயிற்சிப் பள்ளியை தொடங்கினார். மேற்கத்திய மல்யுத்தம், ஜூடோ, கராத்தே, குத்துச்சண்டையுடன் சில புதிய முறைகளையும் சேர்த்து புது வடிவிலான தற்காப்பு கலையை உருவாக்கினார். ‘ஜீட் குன் டோ’ என்ற கலை இவரால் பிரபலமடைந்தது.
இவர் 1971ஆம் ஆண்டு ‘தி பிக் பாஸ்’ படத்தில் நடித்தார். இப்படம் ஆசிய கண்டத்தை அசத்தியது. சண்டைக் காட்சிகளில் இவரது வேகத்துடன் கேமராவின் வேகம் ஈடுகொடுக்க முடியாமல் 24 என்று இருந்த ஃபிரேம் அளவை 34-ஆக மாற்றிய ஹாலிவுட் வரலாறு இன்றளவும் பேசப்படுகிறது.
நான்கு படங்கள் மட்டுமே நடித்து, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சாதனையாளரான புரூஸ் லீ 32வது வயதில் (1973) மறைந்தார். இவரது மறைவுக்குப் பிறகு வெளிவந்த ‘என்டர் தி டிராகன்’ படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் உலகெங்கும் உள்ள இளைஞர்களை ஈர்த்த தனிமனிதன் இவராகத்தான் இருக்க முடியும்.
முக்கிய நிகழ்வுகள்
  • 1986ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா பிறந்தார். 
  • 2001ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவியாகக்கூடிய ஹைட்ரஜன் நிலையில் உள்ள மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளிமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
  • 1975ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை ஆரம்பித்த ராஸ் மாக்வேர்ட்டர் மறைந்தார்.
  • 2008ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் மறைந்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...