ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவிப்பு..!

 ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் BPO நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில் பொது விடுமுறை அறிவித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...