நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!

 நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
           மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 
           
           எங்க எல்லாருக்கும் அப்பவே தெரிஞ்ச முடிவுக்கு எதுவுமே தெரியாத மாதிரி ஒரு மாசமா கதை வசனம் எழுதுனிங்க பாத்தீங்களா…. அதுதாங்க உங்க திறமை…..
************************************
                  நாட்டின் தனித்துவத்திற்கு  ஏற்ப வங்கிகள் விதிகளை செயல்படுத்தினால் நாம் அதற்கு கட்டுப்பட்டு இருப்போம்._ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
                  
                நாடாவது தனித்துவமாவது….. நீங்களே இப்படி சொல்லலாமா??? ஒரே நாடு!!! ஒரே வங்கி!!! இது நல்லா இருக்குல்ல ?!?உங்களுக்கும் வசதியா இருக்கும்?!?
                
************************************** 
           மறைமுகத் தேர்தலால் ஜனநாயகம் எப்படி சீர்குலையும்? மு.க ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.
           
         அதுதான!! எப்படி சீர்குலையும்?! ஓட்டு போட்டது ஒருத்தருக்கு, ஆட்சி செய்றது இன்னொருத்தரு… அப்பவே ஜனநாயகம் சீர்குலையல…. அதுதானுங்களே….
**************************************
          அரசியல் சாசனத்தை நிலைநாட்டுவதில் ஆளுநர்களுக்கும், துணைநிலை ஆளுநர்களுக்கும், முக்கிய பங்கு உள்ளது.- ஆளுநர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
          
          அரசியல் சாசனமா? அட ஆமா?! இந்தியா குடியரசு நாடுல்ல… இந்த மகாராஷ்டிராவில நடந்த  குழப்பத்தில மறந்தே போச்சு…….
***************************************
         கிரிக்கெட்டிலும் அரசியலிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஏற்கனவே நான் கூறிய கருத்தின் முக்கியத்துவத்தை இப்போது நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.- மகாராஷ்டிர அரசு அமைந்தது பற்றி நிதின் கட்கரி.
         
         நீங்க சரியா தானுங்க சொல்லி இருக்கீங்க….  எவ்வளவு அடிச்சாலும் ஏன்னு  கேக்காத பந்து மாதிரி நாங்க இருக்கோமே… நீங்க ஆறும் நாலுமா அடிங்க…
****************************************

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...