மனது பூப்பதுதான் கணக்கு – வயது பூப்பது இல்லை.
உடலில் ஏற்படும் மாற்றங்களின் போதோ, இல்லை உறவுக்காரர்கள் புடைசூழ நடக்கும் சடங்குகளிலோ ஒரு பெண் பூப்பெய்துவதில்லை. அவளைப் பொறுத்தவரை தனது மனதுக்கு நெருக்கமான ஒருவனைக் காணும்பொழுதே அவள் பூத்துவிடுகிறாள். இங்கு மனது பூப்பதுதான் கணக்கு – வயது பூப்பது இல்லை.
ஆனால் இந்த விஷயத்தை அந்தப் பெண் பொதுவெளியில் பேசுவதற்கான புற சூழல் இச்சமூகத்தில் இல்லை. இந்த உணர்வை பூப்பெய்திய பெண் இடத்தில் இருந்து முத்து இப்படி சொல்கிறார்,
“அவன் பார்த்ததுமே
அந்த ஒரு நொடியை
நெஞ்சில் ஒளித்து வைத்தேன்
நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே
என் வயதறிந்தேன்”.
சடங்குகளை மீறிய வரிகள் இவை.ஒரு ஆணைப் பார்த்த கணம் பூப்பெய்தினேன் என்று கூறும் ஒரு பெண்ணின் உணர்வையும், மனதுக்குள் தோன்றிய புது காதலையும் ஒரு ஆணாக இருந்துகொண்டு இப்படி எழுத முடியுமா?. கூடு விட்டு கூடு பாயும் முத்துக்குமாரால் முடியும்.
இணையத்தில் இருந்து எடுத்தது