உலக உடல் பருமன் நாளின்று.
உலக உடல் பருமன் நாளின்று.
உடம்பால் அழிவின் உயிரால் அழிவர் என்பது திருமூலரின் வாக்கு. அந்த வகையில் நோய்களுக்கு பல்வேறு காரணம் இருப்பினும் உடல் பருமன் சமீப காலமாக அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.
உடல் பருமன் என்பது அதிக உடல் எடையை குறிக்கும். இதனை பிஎம்ஐ (உடல் பருமனை குறிக்கக்கூடிய குறியீடு) எனும் அளவீட்டால் கணிக்கலாம்.
சராசரியாக ஆண்கள் 21 முதல் 25 பிஎம்ஐ, பெண்கள் 18 முதல் 23 பிஎம்ஐ கொண்டவர்களாக இருக்கலாம். இந்த அளவை தாண்டினால் அதிக உடல் எடையாக கருதப்படும். பிஎம்ஐ 30 தாண்டினால் உடல் பருமனாக கருதப்படும்.
இப்போதெல்லாம் உலக அளவில் உடல் பருமன் நாளுக்கு நாள் அதிகமாகிறது. உலக மக்கள் தொகையில் 350 மில்லியன் மக்கள் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடல் பருமன் அதிகம் உள்ள நாடுகளின் தர வரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் உடல் பருமனாக உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உடல் பருமன் மிக முக்கிய தொற்றா நோய்களான சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம், மூட்டு நோய்கள், பித்தப்பை கல், சிலவகை புற்று நோய்கள் இவற்றிற்கு ஆதாரமாக உள்ளது. உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன? உடல் பருமனை கணிப்பது எப்படி? உடல் பருமனை குறைப்பது எப்படி? என்பதை யோசித்து அதைக் கட்டுபடுத்த தூண்டு நாளிது