தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day, March 4
தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day, March 4 )
தேசிய அளவிலான பாதுகாப்புக் குழு அமைப்பு 1966-ல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டதை அடுத்து, நம் நாட்டில் 1971 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. அடுத்து, 1972-ல் தேசிய பாதுகாப்பு தினம் அறிவிக்கப்பட்டது மும்பையை தலைமையகமாக கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. அரசியல்சாரா தொண்டு நிறுவனமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயல்படுகிறது.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்திய தொழிற்சாலைகளுக்கு விருதுகள் வழங்குகிறது. மேலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மேம்பாட்டு விருதுகளையும் ஒவ்வொரு வருடமும் வழங்குகிறது.
தொழிலாளர்கள் விபத்துகள் இன்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல் நலன் உடனும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தினத்தில் , தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள், கட்டுரை, பேச்சு, சுலோகன் போட்டிகள்,கருத்தரங்குகள், விநாடி-வினா, மாதிரி ஒத்திகைகள், பாதுகாப்பு குறித்த கலை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும்.நடத்தி, வெற்றி பெறும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்