சங்கத்தமிழன் திரைவிமர்சனம்
சென்னையில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன் நண்பர் சூரியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார் நாயகன் முருகன் (விஜய் சேதுபதி).
தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தாமிர உருக்கு ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
அந்த தாமிர உருக்கு ஆலை உரிமையாளரின் மகள் முருகனைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர்களின் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமானால்முருகனை அழைத்துப் பேசும் தொழிலதிபர், தன் தாமிர ஆலைக்கு எதிர்ப்பு நிலவும் ஊருக்கு முருகனை அனுப்பி, அந்த ஊரைச் சேர்ந்த சங்கத் தமிழனைப் (அவரும் விஜய் சேதுபதிதான்) போல நடித்து, ஊர் மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்பும்படி சொல்கிறார்.
வழக்கமான ஆள்மாறாட்டம் கதையில் குழப்பமோ குழப்பம் இடியாப்பச் சிக்கலைப் போல நகருகிறது திரைப்படம் நுனியைத் தொலைத்து தேனி மாவட்டத்திற்கு வரும் முருகன், சங்கத்தமிழனாக நடிக்க ஆரம்பிக்கிறார்.
பிறகு, அவர்தான் உண்மையான சங்கத் தமிழன் என்று சொல்லி படத்தை முடித்துவிடுகிறார்கள்.படத்தில் சூரி இருக்கிறார். ஆனால், நகைச்சுவை இல்லை. மோசமான பின்னணி இசை. விஜய்சேதுபதி
திரைப்படத்தின் பெயரைத் தேர்வு செய்வதில் காட்டும் கவனத்தை சற்று கதையிலும் காட்டலாம்