தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.