காலம்தோறும் பெண் – 2 – நளினி தேவி
காதலும் கற்பும்
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பெற்றோர் இசைவுடனோ இசைவின்றியோ மனம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோர் இசையாத போது, உடன்போக்கு சென்றுள்ளனர். இந்த உடன்போக்கே இன்று ஓடிப்போதல் என்று என்று கொச்சைப் படுத்தப்படுகிறது.
போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தநாட்களல் அவளுடைய காதலன் வந்தால்தான் அவன் இருக்கிறானா இல்லையா என்பதே தெரியும் தம் காதலையும் துயரையும் வெளியே சொல்ல இயலாத நிலையில் பெண்கள் இருந்தமையால், காதலித்த ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி உள்ளனர்.
இதைத் தடுக்க பலர் முன்னிலையில் ஊர்பெரியவர் தலைமையில் திருமணம் செய்யப்பட்டது. காதல் வாழ்க்கை களவு வாழ்க்கை என்றும் இல்லற வாழ்க்கை கற்பு வாழ்க்கை என்றும் கூறப்பட்டது. இந்தக் கற்பு பின்னால், பெண்ணின் உடல் தூய்மையைக் குறிக்கும் சொல்லாகிக் கற்பு எனும் கற்பனையாகிவிட்டது.