இன்பமும் துன்பமும்
இன்பமும் துன்பமும்“
இன்பமும் துன்பமும்
இரண்டல்ல ஒன்றுதான்.
வாழ்க்கை என்னும்
நாணயத்தின்,
இருபக்கம்
இவைகள்தான்.
அவற்றைப் பிரித்து
வாழ முயற்சித்தால்,
தோல்வி பெறுவது
நிச்சயம்.
ஒன்று போய்
ஒன்று வரும்,
எதுவும் நிரந்தரமாய்
நிற்காது,
எதிலும் நிதானத்தைக்
கடைபிடித்தால்,
வாழ்வில் வெற்றி
பெறுவது நிச்சயம்.
கண்ணதாசன்
சொல்லுவார்:
“வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்,
வாசல்தோறும் வேதனை
இருக்கும்,
வந்த துன்பம்
எதுவென்றாலும்,
வாடி நின்றால்
ஓடுவது இல்லை,
எதையும் தாங்கும்
இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும்
அமைதி இருக்கும்”என்று
மனிதன் துன்பம் வந்தால்
அழுகிறான்,
இன்பம் வந்தால்
மகிழ்கிறான்.
“சோதனை மேல் சோதனை,
போதுமடா சாமி,
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி”
என்று பாட்டுப் பாடி
புலம்புறான்”
இதுவும் கண்ணதாசன்
சொன்னது,
இதில் பெரும்
அர்த்தமுள்ளது.
முண்டாசுக் கவி
சொல்கிறார் :
“துன்பமே இயற்கை எனும்
சொல்லை மறந்திடுவோம்,
இன்பமே வேண்டி நிற்போம்
யாவும் அவள் தருவாள்,
நம்பினோர் கெடுவதில்லை
நான்கு மறைத் தீர்ப்பு,
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிக வரம் பெறலாம்” என்று.
புத்தபிரான்
சொல்கிறார் :
“பற்றற்ற வாழ்க்கையில்
பதட்டமே இருக்காது,
ஆசையை அடக்க்கி
விட்டால்,
துன்பமே தெரியாது”
என்று
சத்ய சாய்
சொல்கிறார் :
“நியாயமான ஆசைகளில்
தவறில்லை,
பேராசை
பட்டுவிட்டால்,
வாழ்க்கை பேதலித்துப்
போய் விடும்” என்று.
தாமரை மேல்
தண்ணீர் போல்,
ஒட்டாமல்
வாழ்ந்திடுவோம்,
இன்ப துன்ப மாய வலையில்
சிக்காமல் சாதிப்போம்.
பி வி வைத்தியலிங்கம்
1 Comment
ஐயாவின் ,
கவிதைகள் மிகச் சிறப்பு.