மருத்துவப் பரிசோதனை- ஒரு வியாபாரம் “
மருத்துவப் பரிசோதனை- ஒரு வியாபாரம் ”
காலை ஏழு மணி ஆகி விட்டால்,
அது ரத்தமுறிஞ்சும் நேரம்,
வீடு வீடாய் சிரிஞ்சுடனே (Syringe) அலைபாயும் கூட்டம்,
அது வெள்ளை
அங்கிகளின் கூட்டம்.
பாக்கேஜில் எடுத்துக் கொண்டால்,
செலவு மிகக் குறையும்,
மனித ரத்தத்தை அலசி எடுத்து, குறைகள் சொல்லும் அறிக்கை,
அது இல்லாமல் மருத்துவர்கள் இன்று வைத்தியம் பார்ப்பதில்லை.
நாடி பார்த்து மருந்தளிக்கும், மருத்துவம் மறந்து போச்சு.
Blood Testல் ஆரம்பிக்கும் இப்பரிசோதனை முறைகள்,
முற்றுப்பெறா முழுநீள ஒரு பட்டியலின் லிஸ்டு.
EEG, ECG, CT SCAN
முதல் துவங்கி,
MRI ராட்சசனின் ஆதிக்கம் வரை செல்லும்.
அதன் பிறகும் ஆட்டிப் படைக்கும், ஸ்பெஷாலிட்டி மருத்தவ மனைகள்,
நோயாளி சாகும் வரை அலைய விடும் அரக்கன்.
விஞ்ஞானம் நமக்களித்த மென்பொருளின் துணை கொண்டு,
வளர்ந்து விட்ட அல்லோபதி, நமை படுத்தும் பாடு,
அற்புத சிகிச்சை முறைகள், நோய் குணப்படுத்தும் பாங்கு,
பிரமிக்கும் ஒட்டு வைத்தியம், என எத்துணை நவீன சிகிச்சை !
ஆனால், காசு மட்டும் இல்லையென்றால், இவை பெறுவது மிக அரிது,
காப்பீட்டுத் திட்டமெல்லாம் ஓரளவே கை கொடுக்கும்.
எனவே “நம் ஆரோக்யம் நம் கையில்” என்ற புரிதலோடு வாழ்ந்தால்,
கஷ்டமில்லை நஷ்டமில்லை, நோயை வென்று விடலாம்.
இரவு எட்டுமணித் தூக்கத்தை எப்போதும் கடைப்பிடித்து,
உணவில், காய்கறிகள் கனிவகைகள், பெருமளவு சேர்த்து,
உடற்பயிற்சி, நடைப் பயிற்சி யோகாசனம் தினமும்,
மூச்சுப் பயிற்சி, தியான முறைகள் பாங்காகக் கூட்டி,
எதிர்மறை எண்ணங்களை முற்றிலும் ஒழித்து
ஒழுக்கமுடன் வாழும் வாழ்க்கை, மண்ணுலகில் ஓர் ஸ்வர்க்கம்.
குடி போதையில் அடிமையாகி துன்புறும்
ஏ மனிதா,
என் பேச்சை நீ கேளு, பலன்கள் மிகப் பெறுவாய்,
ஒழுக்கமற்ற வாழ்க்கை தான், நரகமென்று அறிவாய்.
இயற்கையோடு இணைந்து சென்று, இன்பங்கள் பல பெறுவோம்,
செயற்கையைத் தவிர்த்து விட்டு, துன்ப வாழ்வைத் தொலைப்போம்.
, பி வி வைத்தியலிங்கம்.
1 Comment
ஐயா,
அடுத்தவர் மீதான அக்கறை அளப்பரியது.