வரலாற்றில் இன்று (13.02.2024 )

 வரலாற்றில் இன்று (13.02.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 13 கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

962 – உரோமின் ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கும், திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1322 – இங்கிலாந்தின் எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
1542 – முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
1575 – பிரான்சின் மன்னராக மூன்றாம் என்றி முடிசூடினார்.
1633 – திரிபுக் கொள்கை விசாரணையை எதிர்கொள்ள கலீலியோ கலிலி உரோம் நகர் வந்தார்.
1689 – வில்லியம், மேரி ஆகியோர் இங்கிலாந்தின் கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
1692 – கிளென்கோ படுகொலைகள்: இசுக்காட்லாந்தில் கிளென் கோ என்ற இடத்தில் ஏறத்தாழ 80 டொனால்டு வம்சத்தினர் புதிய மன்னர் வில்லியமுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்ததால் படுகொலை செய்யப்பட்டனர்.
1739 – ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷாவின் படையினர் இந்தியாவின் முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தனர்.
1755 – சாவகத்தின் மடாரம் பேரரசு “யோக்யகர்த்தா சுல்தானகம்” மற்றும் “சுரகர்த்தா சுல்தானகம்” என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1880 – தாமசு ஆல்வா எடிசன் எடிசன் விளைவை அவதானித்தார்.
1913 – 13வது தலாய் லாமா திபெத்திய விடுதலையை அறிவித்தார்.
1914 – பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.[1]
1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு தனது தலைநகரை கொல்கத்தாவில் இருந்து புது தில்லிக்கு நகர்த்தியது.
1934 – சோவியத் நீராவிக்கப்பல் செலியூன்ஸ்கின் 111 பேருடன் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: புடாபெஸ்ட் நகர முற்றுகை முடிவுக்கு வந்தது. செருமனிய, அங்கேரிப் படைகள் செஞ்சேனையிடம் சரணடைந்தன.
1960 – பிரான்சு வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி, அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 4வது நாடானது.
1971 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.
1975 – நியூயார்க் உலக வணிக மையத்தில் தீ பரவியது.
1978 – சிட்னியில் ஹில்ட்டன் ஓட்டலுக்கு வெளியே பாரவூர்தி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.
1981 – அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தில் லூயிவில் நகரில் இடம்பெற்ற கழிவுநீர்க் குழாய் வெடிப்பில் இரண்டு மைல் நீள வீதிகள் சேதமடைந்தன.
1983 – இத்தாலி, துரின் நகரில் திரையரங்கு ஒன்று தீப்பற்றியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
1984 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக கான்ஸ்டன்டீன் செர்னென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985 – இலங்கையில் கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
1990 – செருமானிய மீளிணைவு: இரண்டு செருமனிகளையும் ஒன்றினைக்க இரண்டு-கட்டத் திட்டத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டது.
1991 – வளைகுடாப் போர்: பகுதாது நகரில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது கூட்டு நாடுகளின் குண்டுகள் வீழ்ந்ததில் 400 ஈராக்கியப் பொதுமக்கள் கொலலப்பட்டனர்.
1996 – நேப்பாளத்தில் மாவோயிசப் பொதுவுடமைவாதிகளால் நேபாள மக்கள் புரட்சி ஆரம்பிக்கப்பட்டது.
2001 – எல் சல்வடோரில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
2004 – அண்டவெளியின் மிகப்பெரிய வைர, வெண்குறு விண்மீன் பிபிஎம் 37093 கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
2008 – ஆத்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக ஆத்திரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார்.
2010 – இந்தியாவில் புனே நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டு, 60 பேர் காயமடைந்தனர்.
2017 – தென்கொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் சோங்-நம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

1672 – எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (இ. 1731)
1766 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளியலாளர் (இ. 1834)
1805 – டிரிஃக்லெ, செருமானிய கணிதவியலாளர் (இ. 1859)
1835 – மிர்சா குலாம் அகமது, இந்திய மதத் தலைவர் (இ. 1908)
1879 – சரோஜினி நாயுடு, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1949)
1910 – வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)
1915 – ஆங் சான், பர்மாவின் 5வது பிரதமர் (இ. 1947)
1920 – அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)
1933 – பவுல் பியா, கமரூனின் 2வது அரசுத்தலைவர்
1934 – வெ. யோகேசுவரன், இலங்கை அரசியல்வாதி (இ. 1989)
1937 – ரூப்பையா பண்டா, சாம்பிய அரசுத்தலைவர்
1979 – ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக், நோர்வே நாட்டுக் கொலையாளி

இறப்புகள்

1542 – கத்தரீன் ஹவார்ட், இங்கிலாந்து அரசி (பி. 1523)
1883 – ரிச்சார்ட் வாக்னர், செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. 1813)
1950 – செய்குத்தம்பி பாவலர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1874)
1973 – ஒய். வி. ராவ், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1903)
1987 – எம். பக்தவத்சலம், தமிழக முதலமைச்சர், அரசியல்வாதி (பி.
1897)
2009 – கிருத்திகா, தமிழக எழுத்தாளர்
2014 – பாலு மகேந்திரா, இலங்கை-இந்தியத் திரைப்பட இயக்குநர்,  
ஒளிப்பதிவாளர் (பி. 1939)
2016 – ஓ. என். வி. குறுப்பு, இந்தியக் கவிஞர் (பி. 1931)
2016 – ஏ. நடராஜன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)
2017 – கிம் சோங்-நம், வட கொரிய அரசியல்வாதி (பி. 1971)

சிறப்பு நாள்

குழந்தைகள் நாள் (மியான்மர்)
உலக வானொலி நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...