“நண்பர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்தமைக்கு நன்றி” -முதல்வர் ஸ்டாலின் | உமாகாந்தன்

 “நண்பர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்தமைக்கு நன்றி” -முதல்வர் ஸ்டாலின் | உமாகாந்தன்

தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் 2வது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், சேஷம்பட்டி சிவலிங்கம், நாச்சியார் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்

தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த திரு.சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான திருமதி செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.

அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...