வரலாற்றில் இன்று ( 18.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 18  கிரிகோரியன் ஆண்டின் 138 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 139 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

332 – கான்ஸ்டண்டினோபில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார்.
872 – இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார்.
1096 – முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர்.
1268 – அந்தியோக்கியா எகிப்தின் மம்லுக் சுல்தான் பைபார்களிடம் வீழ்ந்தது.
1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.
1593 – மதமறுப்புக் குற்றங்களுக்காக பிரித்தானிய நாடக எழுத்தாளர் கிறித்தோபர் மார்லொவ் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
1652 – வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.
1756 – பிரித்தானியா பிரான்சு மீது போரை அறிவித்ததைத் தொடர்ந்து ஏழாண்டுப் போர் ஆரம்பமானது.
1803 – நெப்போலியப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் பிரான்சு மீது போரை அறிவித்தது.
1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக மேலவை தெரிவு செய்தது.
1812 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவலைப் படுகொலை செய்த குற்றத்திற்காக ஜோன் பெல்லிங்காம் என்பவனுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
1896 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசின் முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் போது “கோதிங்கா” என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.
1900 – தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.
1912 – முதலாவது இந்தியத் திரைப்படம் சிறீ பந்தாலிக் மும்பையில் வெளியிடப்பட்டது.
1917 – முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்கு கட்டாய ஆள் திரட்டு அதிகாரம் அமெரிக்க அரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டது.
1927 – மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: மோண்ட்டி கசீனோ சண்டை முடிவுக்கு வந்தது.
1944 – கிரிமியத் தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.
1955 – முதலாவது இந்தோசீனப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள், போர்வீரர்கள், பிரான்சிய இராணுவத்தினர் அடங்கிய 310,000 பேர் கம்யூனிச வடக்கு வியட்நாமில் இருந்து தென் வியட்நாமிற்கு இடம் பெயர்ந்தனர்.
1969 – அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1973 – சோவியத் ஒன்றியத்தின் ஏரோபுளொட் வானூர்தி 109 வான்வெளியில் கடத்தப்பட்டு, கடத்தல்காரரின் குண்டு வெடித்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 82 பேரும் கொல்லப்பட்டனர்.
1974 – அணுகுண்டு சோதனை: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
1980 – வாசிங்டனில் புனித எலன்சு மலை தீக்கக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
1984 – அன்னலிங்கம் பகீரதன் சயனைடு அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.
1991 – வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும், எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை.
1994 – இசுரேலியப் படைகள் காசாக்கரையில் இருந்து முற்றாக விலகியது. பாலத்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.
2005 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அனுப்பப்பட்ட படிமம் புளூட்டோ நிக்சு, ஐதரா என்ற மேலதிகமாக இரண்டு நிலாக்களைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தியது.
2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.
2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.
2015 – கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
2018 – அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
2018 – கியூபா தலைநகர் அவானாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 113 பேரில் 112 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1048 – ஓமர் கய்யாம், பார்சியக் கணிதவியலாளர், வானியலாளர், கவிஞர் (பி. 1131)
1850 – ஆலிவர் ஹெவிசைடு, ஆங்கிலேயப் பொறியியலாலர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1925)
1868 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (இ. 1918)
1872 – பெர்ட்ரண்டு ரசல், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியக் கணிதவியலாளர், வரலாற்ராளர், மெய்யியலாளர் (இ. 1970)
1881 – தி. அ. இராமலிங்கம் செட்டியார், தமிழக வழக்கறிஞர், அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1952)
1883 – வால்ட்டர் குரோப்பியசு, செருமனிய-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1969)
1897 – பிராங்க் காப்ரா, இத்தாலிய-அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1991)
1920 – ஆர். பிச்சுமணி ஐயர், தமிழக வீணை இசைக்கலைஞர் (இ. 2015)
1920 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (இ. 2005)
1920 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (இ. 2000)
1929 – வெ. இராதாகிருட்டிணன், தமிழக விண்வெளி அறிவியலாளர் (இ. 2011)
1930 – தான் இலெசிலி இலிண்டு, அமெரிக்க வானியலாளர்
1933 – தேவ கௌடா, இந்தியாவின் 11வது பிரதமர்
1939 – பீட்டர் குருன்பெர்க், செருமானிய இயற்பியலாளர்
1969 – பசுபதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர்

இறப்புகள்

526 – முதலாம் யோவான் (திருத்தந்தை) (பி. 470)
1911 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1860)
1979 – வீ. தி. சம்பந்தன், மலேசிய அரசியல்வாதி (பி. 1919)
1983 – பி. எஸ். இராமையா, தமிழக எழுத்தாளர் (பி. 1905)
2009 – வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், ஈழத்துப் புரட்சியாளர் (பி. 1954)
2009 – பாலசிங்கம் நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர்
2009 – இசைப்பிரியா, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி (பி. 1982)
2010 – கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1932)

சிறப்பு நாள்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் (இலங்கைத் தமிழர்)
கிரிமிய தத்தார் இனவழிப்பு நினைவு நாள் (உக்ரைன்)
விடுதலை நாள் (சோமாலிலாந்து, ஏற்கப்படாதது)
பன்னாட்டு அருங்காட்சியக நாள்
போர்க்குற்ற நாள் (இலங்கை)
ஆசிரியர் நாள் (சிரியா)
உலக எயிட்சு தடுப்பு மருந்து நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!