தைபூசத் திருநாளும் அதன் மகிமையும்
தைபூசத் திருநாளும் அதன் மகிமையும்
பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன. சித்தாந்தம். தெய்வம். 1.) சைவம். சிவன். 2.) வைணவம். விஸ்ணு. 3.) சாக்தம். சக்தி. 4.) சௌரம். சூரியன். 5.) கணாபத்தியம். கணபதி. 6.) கௌமாரம். முருகன். இவற்றுள் முருகனை முக்கிய தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் உட்பிரிவு கௌமாரம் ஆகும்.
முருகக் கடவுளின் வழிபாட்டிற்கான விரத, திருவிழா நாட்களில் முக்கியமான ஒன்று தைப்பூசம் ஆகும். விழா என்றால் விழித்திருந்து செய்வது என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும்.
இந்த நாட்களெல்லாம் சிறப்புமிக்க விழா நாட்களாகும். மாதம் நட்சத்திரம். 1.) தை. பூசம். 2.) மாசி. மகம். 3.) பங்குனி. உத்தரம். 4.) சித்திரை. சித்திரை. 5.) வைகாசி. விசாகம். 6.) ஆனி. கேட்டை. 7.) ஆடி. உத்திராடம். 8.) ஆவணி. அவிட்டம். 9.) புரட்டாசி. பூரட்டாதி. 10.) ஐப்பசி. அசுவினி. 11.) கார்த்திகை. கார்த்திகை. 12.) மார்கழி. திருவாதிரை.
இதில் தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவரிற்கு செலுத்தி பூசிப்பது தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும். முருகப்பெருமானிற்கு கடியுண் கடவுள் என்றும் ஒரு பெயர் உள்ளது.
புதியதை உண்பவர் என்று இதற்கு பொருளாகும். வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதிற்கும்,
ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும் (இவற்றை பலியிடுவதற்கு அல்ல ,அர்ப்பணிப்பதற்கு மட்டும், அதாவது நேர்ந்து கோவிலில் விடுதல் என்பர்.) பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும்
. முருகனின் அறுபடை வீடுகளில் பழனியிற்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்டு செல்வது வழக்கமாகிவிட்டது.
அறுபடை விடுகளில் பழனியிலே மிகச் சிறப்பாக தைப்பூச விருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது
.