தைப்பூசம் /தை பவுர்ணமி
தை பவுர்ணமி
திருவண்ணாமலை
தைப்பூசம்
தைப்பூசம்
தை பவுர்ணமி
திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்
. கிரிவலம் வர நல்ல நேரம் எப்போது என தெரிந்து கொள்ளலாம் திருவண்ணாமலை: தை மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. வியாழக்கிழமை தைப்பூசம் நாளில் பவுர்ணமியும் கூடி வரும் நாளில் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது என்பதால் இந்த நாளை தவறவிட வேண்டாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. அக்னியே குளிர்ந்து மலையாகி, ஈஸ்வர அம்சமாக உள்ள இடம் திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.
கிரிவலம் வரும் போது தரிசிக்க வேண்டிய கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அண்ணாமலையாரே ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். கார்த்திகை மாதம் தீபம் திருவிழா முடிந்து கிரிவலம் வருவார். அதே போல தை மாதம் 2ஆம் நாள் கிரிவலம் வருவார். அண்ணாமலையை தொழுது கிரிவலம் வந்தால், மது, மாது, சூது, கொலை, களவு போன்ற ஐந்து பாதகங்கள் தொலையும் என்று புராணங்கள் கூறுகின்றன. கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணமும் உருவாகும். இன்று இரவு பவுர்ணமி திதி தொடங்குகிறது.
நாளை இரவு வரைக்கும் பவுர்ணமி உள்ளது எனவே, திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் தை மாதப் பவுர்ணமி கிரிவலம் புதன்கிழமை இன்று இரவு 09:49 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை ஜனவரி இரவு 11:23 மணிக்கு முடிகிறது.
இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வியாழக்கிழமையன்று தைப்பூசம் நாளில் பவுர்ணமியும் வருவது கூடுதல் சிறப்பு. கிரிவலம் வருவதற்கு ஒரு முறை உள்ளது.
அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வந்து மீண்டும் ராஜ கோபுரத்தில் முடிக்க வேண்டும். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும், ஆசிரமங்களையும், கோவில்களையும் தரிசனம் செய்ய வேண்டும். கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னமிடுவது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம்
அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், நமது பாவப்பிணிகள் அகலும். இவ்வாறாக கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர். தைப்பூசத்தை தொடர்ந்து தொடர் விடுமுறை வருவதால் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பக்தர்களின் வருகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 24ஆம் தேதியும் 25ஆம் தேதியும் சிறப்பு பேருந்துங்களும் இயங்கும் என அறிவித்துள்ளனர்.