அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா..!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தேசம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. அயோத்தி நகரில் சாரை சாரையாக பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் ராமர் கோவில் வளாகம் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது.
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதனையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.