ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்
1 min read

ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்

22.01.2024 அன்று அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் குடமுழுக்கு எனும் கோலாகலமான திருவிழா:

ராம் ராம் ஸ்ரீ ராம் ராம்

ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்

அயோத்தியை ஆண்ட மன்னன் ராஜாராமன்

அன்னை மீது அன்பு வைத்த கோசலராமன்

தந்தையின் சொல்லை வேதமென்ற தசரதராமன்

திருமகளை சுயம்வரத்தில் வென்ற கல்யாணராமன்

நால்வர்களில் மூத்தவராய் பிறந்த இரகுராமன்

நானிலத்தில் நல்லுணர்வை போற்றும் சிவராமன்

அழகோடும் அமைதியும் கொண்ட சுந்தரராமன்

ஆஞ்சநேயர் மனதில் இடம்பிடித்த சீதாராமன்

வில்லையேந்தி வீரம் காட்டிய கோதண்டராமன்

வெற்றியொன்றே முடிவில் பெற்ற ஜெயராமன்

அகிலத்தில் நல்லாசி அளிக்கும் அனந்தராமன்

அயோத்தி ஆலயத்தில் சிறந்து நிற்கும் ஸ்ரீராமன்

ராம் ராம் ஸ்ரீ ராம் ராம்
ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்.

முருக.சண்முகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *