சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3
மு.ஞா.செ.இன்பா
ஈரடி குறளில் ,புதுமை செய்தவன்
இவ்வையகம் திரும்பி பார்க்கும் என்று நினைத்தான்
பாரடி கூத்தை பைத்தியக்காரன் ஒருவன்
ஈரடி குறளை செய்யுள் என்கிறான் என்றது உலகம் ..
வேதனையில் நொந்து ,மனம் ஒடிந்து
விதியே ,சாவை தாராயோ என
திண்ணை தோறும் விசும்பி அந்த புலவனை
அன்னையாய் அணைத்தாள் ஒவ்வை பாட்டி…
ஈரடி குறள் சங்க பொதிகையில் நீந்தி
இதயங்களை கொள்ளை கொண்டன
அந்தோ ..ஆன்மிக சபை அந்த புலவனை
அய்யோ என்றாக்கிட .குறள் ஏட்டோடு நின்றது ..
காலசக்கரத்தின் ஓட்டத்தில் காணாமல் போன
ஞாலத்தின் தலைப்பு செய்தி ,
காலம் கடந்து ,விறகு சருகாய்
கோலம் தொலைத்து எல்சினிடம் கிடைத்தது
வெள்ளைக்காரன் அவன் ,தமிழை நேசித்து
நமசிவாய என கிறித்தவ பரமனை அழைத்தான்
தொல்லை வந்தது ,அவனை தொலைக்க நின்றது .
பிள்ளையாய் நினைத்த குறள் சுவடியை எரிக்க சொன்னான்
கந்தப்பன் எரிக்க நெருப்பு மூட்ட
கையில் இருந்த ஓலைச்சுவடி பரிதாபம் கொள்ள
விந்தை ஓன்று நிகழ்ந்தது ,கந்தப்பன்
சிந்தையில் ஓலை விட்டு குறள் எட்டி பார்த்தது …
திருக்குறள் இன்று உலக மறையானது….
கந்தப்பன் திருக்குறளின் மூல செய்தியானார்
கச்சியப்பர் கந்த புராணத்தின் மூலம் ஆனார்
காட்சிகள் வேறு ,நடந்தவை ஓன்று
வடமொழிக்குள் வாய்ப்பூட்டு இடப்பட்ட தமிழன் செய்தி
திட மனது கச்சியப்பரால் கந்த புராணமாக சிரித்தது …