29-10-2019 செவ்வாய் கிழமை – இன்றைய ராசி பலன்கள்

29-10-2019 செவ்வாய் கிழமை – இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

வாக்குக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
அஸ்வினி : கீர்த்தி உண்டாகும்.
பரணி : மேன்மையான நாள்.
கிருத்திகை : தனவரவு உண்டாகும்.
—————————————

ரிஷபம்
பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பங்காளிகளிடம் அனுசரித்து செல்லவும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். தாய்மாமன் உறவுகளிடம் இருந்த மனவருத்தங்கள் குறைந்து ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் உதவியால் பொருளாதார மேன்மை உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : ஆலோசனை கிடைக்கும். 
ரோகிணி : ஒற்றுமை மேம்படும்.
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————

மிதுனம்
கூட்டாளிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். செய்தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களுடன் பேசும்போது கவனமாக பேசவும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————

கடகம்
நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் யோகத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். கால்நடைகளால் சுபவிரயம் ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : அதிர்ஷ்டம் உண்டாகும்.
ஆயில்யம் : சுபவிரயம் ஏற்படும்.
—————————————

சிம்மம்
கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பூரம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
—————————————

கன்னி
தொழில் சார்ந்த முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யவும். கூட்டாளிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
அஸ்தம் : செயல்திட்டம் அமைப்பீர்கள்.
சித்திரை : சேமிப்பு அதிகரிக்கும்.
—————————————

துலாம்
போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். கல்வி சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சாதகமான நாள். 
சுவாதி : சோர்வு உண்டாகும்.
விசாகம் : உபதேசங்கள் கிடைக்கும்.
—————————————

விருச்சிகம்
அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சாதகமான வாய்ப்புகள் அமையும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
அனுஷம் : வாய்ப்புகள் அமையும்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.
—————————————

தனுசு
அதிகார பதவியில் உள்ள உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகள் உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
—————————————

மகரம்
சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களினால் சுபவிரயம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழல் அமையும். ஆன்மீகம் சம்பந்தமான காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————

கும்பம்
இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தொழிலில் மரியாதை உயரும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளை முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : முடிவுகள் சாதகமாகும்.
சதயம் : மாற்றமான நாள்.
பூரட்டாதி : உறவுகள் மேம்படும்.
—————————————

மீனம்
உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணியில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
ரேவதி : காலதாமதம் உண்டாகும்.
——————————

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...