30-10-2019 புதன் கிழமை – இன்றைய ராசி பலன்கள்

30-10-2019 புதன் கிழமை – இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
 முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும், சூழலும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். சில இன்னல்களுக்கு அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
அஸ்வினி : நிதானத்துடன் செயல்படவும். 
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : கவனம் வேண்டும். 
—————————————
ரிஷபம்
 தம்பதிகளுக்கிடையே எதிர்காலம் சார்ந்த விவாதங்கள் உண்டாகும். புதியவர்களின் அறிமுகம் மற்றும் நட்பால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தந்தைவழி உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : விவாதம் உண்டாகும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
மிதுனம்
 செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மற்றவர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மிருகசீரிஷம் : மந்தத்தன்மை உண்டாகும்.
திருவாதிரை : இழுபறிகள் நீங்கும்.
புனர்பூசம் : தன்னம்பிக்கை உயரும்.
—————————————
கடகம்
 பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விவகாரங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : கனிவுடன் பழகவும்.
பூசம் : சுபமான நாள்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
சிம்மம்
 பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய உறுப்பினர்களின் வருகையால் சுபிட்சம் உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் நிலவும். வேலை செய்யும் இடங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : சுபிட்சம் உண்டாகும்.
உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
—————————————
கன்னி
 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படுவதால் தேவையற்ற அவச்சொற்களை தவிர்க்கலாம். புதிய பொருட்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். அயல்நாட்டு பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.
அஸ்தம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சித்திரை : மேன்மையான நாள்.
—————————————
துலாம்
 பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்குவதற்கான ஆதரவுகள் கிடைக்கும். பாசன வசதிகள் மேம்படும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சித்திரை : ஒற்றுமை மேம்படும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள். 
—————————————
விருச்சிகம்
 இளைய உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக செயல்படவும். திட்டமிட்ட பணியில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். சொத்து சேர்க்கைக்கான முயற்சிகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள் 
விசாகம் : அனுகூலமான நாள். 
அனுஷம் : மேன்மை உண்டாகும். 
கேட்டை : முயற்சிகள் மேம்படும்.
—————————————
தனுசு
 மனச்சோர்வுகளால் வேலையில் கவனமின்றி செயல்பட்டு, விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். உடல்நலத்தில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகலாம். நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9 
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : விமர்சனங்கள் நேரிடலாம்.  
பூராடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
—————————————
மகரம்
 குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அமைதியுடன் நடந்து கொள்ளவும். நிர்வாகத்துறையில் உங்களின் திறமைக்கான அங்கீகாரம் மற்றும் கீர்த்தி உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.
திருவோணம் : அமைதி வேண்டும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
—————————————
கும்பம்
 அறச்செயல்களால் மேன்மையுடைய நற்பேறுகள் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த பயணங்களால் பொறுப்புகள் மற்றும் உயர்வு கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே உறவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : நற்பேறுகள் உண்டாகும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : உறவு மேம்படும். 
—————————————
மீனம்
 தந்தைவழி உறவுகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். வேலை விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 
பூரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : இலாபம் உண்டாகும்.
ரேவதி : சாதகமான நாள்.
———————————-

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...