சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில்
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில்
மு.ஞா.செ.இன்பா
அன்பான நண்பர்களே
வணக்கத்துடன்
சில விடயங்கள் நம் மனதில் மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த கவிதை தொகுப்பு தொடர் மழையாய் உங்களை குளிர்விக்கும் .
நான் பெரிய எழுத்தாளன் இல்லை .சபை அறிந்த பெரும் புலவனும் இல்லை .தமிழை எழுத படிக்கச் தெரியும் .அந்த அறிவில் கந்த புராணத்தை கவிதை வடிவில் கொண்டு வருகிறேன் . .ஆன்மிகம் பாதையில் சாதனை புரிந்தோர் .என்ன புதிதாக சொல்லிவிடப்போகிறான் என்று? என்னை ஏளனமாக பார்க்கலாம் .நான் அணில் தான் ஆனால் என்னாலும் மரத்தின் உச்சாணியில் இருந்து கொண்டு உலகை பார்க்க முடியும் .அந்த தேடல் தான் இது .
குறை இருக்கும் ,நிறை வரும்போது குறை மறைந்து விடும் .நான் நிறை தேடி பயணிக்கிறேன் .என்னை எழுத தூண்டிய என் தோழி ஸ்வீட்லின்,லதா சரவணன் ,கமலகண்ணன் ஆகியோருக்கு நன்றிகள் ..
இந்த கவிதை தொடர் ஈழத்தில் என் இன விடுதலைக்காக உயிர் துறந்த தியாகங்களுக்கு சமர்ப்பணம்
மு.ஞா .செ .இன்பா
குறிஞ்சி அழகனை காணும் முன் ..
———————————————————
ஒரு கண்சிமிட்டல்
———————————–
மலைஏறி ,மயில் ஏறி
மா அழகன் வருகிறான்
மெய் கூறி ,மெய்யாகி
மெய் சிவந்ததோன் வருகிறான்
வில் என வேல் பாய ,
வல்குணம் சிதைக்க வல்லோன் வருகிறான்
நல்உலகம் உய்ய ,
நல் குணத்தோன் சொல்லாகி கனிகிறான்
பிள்ளை என்று அள்ளி அணைக்க -மந்திர
வில்லை வளைத்து விளையாடுகிறான்
எல்லையில்லா ஞானத்தில் ஈசனின்,
முல்லை செவிகளுக்கு அறிவு ஊட்டி
ஞானத்தில் சிரிக்கிறான் .
செந்தூரின் நீல வண்ண மேனியில்
சிந்தும் கருணையாக மொழிகிறான்
இந்தூர் மட்டும் போதும் என்று இல்லாது
அந்தூர் என அறுப்படையில் முகம் காட்டுகிறான்
சூரன் திரியை கொளுத்தி ,
நற்ஆரணம் காத்த இவன்
மன்னனாய்,தமிழனின்
மகிமை அடையாளமாய் சிரித்திட
சேயோன் ஆகிப்போனான் ,
கவிதை வடிவில் அவனை தாலாட்டுகிறான்
கந்தபுராணம் என கதை சொல்கிறேன்
காதுகள் கேட்டால் கவிதை
காலங்கள் கேட்டால் புதுமை …
கொஞ்சம் பொறுமையோடு இனி படியுங்கள் …இது இலக்கிய உலா