அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு | சதீஸ்

 அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு | சதீஸ்

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ரமேஷ், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் இளங்கோ மற்றும் சிஐடியு, ஏ ஐ டி யு சி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பால் பொங்கல் நேரத்தில் போக்குவரத்து சேவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, போராட்ட முடிவை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார். பொங்கல் விடுமுறைக்குப் பின்பு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்னைகளைக்கும் உரிய தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...