பாகுபாடு
பாகுபாடு
அல்லும் பகலும் உழைக்கின்றார்
அவனைப் புகழும் ஆளில்லை
அரசியல் பக்கம் சாய்கின்றார்
அதனைப் புகழா நாளில்லை
இடியும்,மழையிலும் இறக்கின்றார்
இரக்கம் காட்ட நபர் இல்லை
இறைவன் போலப் பார்க்கின்றார்
இயக்கும் நிலையில் நடப்பார் இல்லை
கல்லும் மண்ணும் சுமக்கின்றார்
கருணை காட்டும் கண்ணில்லை
கதரில் ஆடை அணிகின்றார்
கதறித் தலைவா என்கின்றார்
குமுறிக் குமுறி கரைகின்றார்
குரலைக் கேட்க காதில்லை
கூட்டம் கூட்டிப் பேசுகின்றார்
கொட்டம் போட்டு மகிழ்கின்றார்
உழைப்பவனுக்கு உன் சீதனம்
உண்மையில் உதாசீனம்
உறிஞ்சுபவனுக்கு உண்டான உடமை
மக்களிடம் மண்டிய மடமை.
கவிஞர்
செ.காமாட்சி சுந்தரம்