நடிகர் விஜய் இன் G.O.A.T. : அடுத்தடுத்து வெளியான அசத்தல் போஸ்டர்ஸ் | சதீஸ்

 நடிகர் விஜய் இன் G.O.A.T. : அடுத்தடுத்து வெளியான அசத்தல் போஸ்டர்ஸ் | சதீஸ்

நடிகர் விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்துள்ளார் தளபதி. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, தாய்லாந்து, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட நிலையில் புத்தாண்டையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை நேற்றைய தினம் படக்குழுவினர் வெளியிட்டனர். விஜய் இருவேறு கேரக்டர்களில் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய்யை பார்த்து ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

படத்திற்கு The greatest of All time என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் இரண்டாவது லுக்கை இன்றைய தினம் புத்தாண்டு கொண்டாட்டமாக நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படத்திலும் அப்பா -மகன் இருவரும் இருக்கும்படி அமைந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டமாக அடுத்தடுத்து வெளியாகியுள்ள இந்த போஸ்டர்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளன.

நடிகர் விஜய் அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் மட்டுமில்லாமல் இளைய தலைமுறை இயக்குநர்களுடனும் கைகோர்த்து நடித்து வருகிறார். பல சோதனை முயற்சி படங்களிலும் இணைந்து வருகிறார். கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மாஸ் காட்டின. இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே சூட்டிங் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் புத்தாண்டு கொண்டாட்டமாக படத்தின் டைட்டில் பர்ஸ்ட், லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. படத்திற்கு The greatest of All Time என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் அப்பா மற்றும் மகன் கெட்டப்பில் நடிகர் விஜய் காணப்பட்டார். இருவரும் கைகோர்த்தபடி ஒரே மாதிரியான கெட்டப்பில் நடந்து வருவதாக போஸ்டர் காணப்பட்டது. இதில் மகன் விஜய் மிகவும் இளமையாக காணப்பட்டார்.

இருளை ஒளியால் விழுங்க முடியும் ஆனால் இருளால் ஒளியை கிரகிக்க முடியாது என்று இதற்கு கேப்ஷனும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டமாக இன்றைய தினமும் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அப்பா விஜய் மற்றும் மகன் விஜய் ஒளியை கிழித்துக் கொண்டு பைக்கில் பறப்பதாக காட்டப்பட்டுள்ளது. இருவரும் தங்களது ஒரு கையில் துப்பாக்கிகளால் சுடுவதாகவும் உள்ளது. இதிலும் இளமையான விஜய்யின் லுக் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

டைம் டிராவலை மையமாக கொண்டே இந்தப் படத்தின் கதையையும் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் கதை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி வைபவ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யை வெங்கட் பிரபு எப்படி காட்டப் போகிறார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...