தண்ணீர்‌!

 தண்ணீர்‌!
இயற்கையின்‌ இலவச பரிசு
இன்றைய வியாபாரத்தின்‌
தலைவன்‌ ஆகி விட்டது

ஒட்டகமும்‌ ஓடை நீரை விட்டு
ஒப்பனை பூசிய நீரை குடிக்கும்‌
கற்பனை வந்தாகிவிட்டது

தவித்த வாய்க்கு இல்லாத தண்ணீர்‌
தரம்‌ கெட்ட குளிர்பானத்திற்கு
தாராளமாக தந்தாகிவிட்டது

பணகாரன்‌ பாட்டில்‌ நீரோடு வலம்‌ வர
பாமரனோ காலி குடத்தோடு சாலையோரம்‌
நிற்கும்‌ நிலை என்றாகிவிட்டது

தளிரான நம்‌ தலைமுறை தண்ணீருக்காக
கண்ணீரில்‌ கரையாமல்‌ காக்க
தங்கமாய்‌ தண்ணீரை சேமிப்போம்‌
தலைமுறையை காப்போம்‌

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...