நாடாளுமன்றத்தில் புகை குண்டு அட்டாக்..! | நா.சதீஸ்குமார்

 நாடாளுமன்றத்தில் புகை குண்டு அட்டாக்..! | நா.சதீஸ்குமார்

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நபரை வெளியே போலீசார் அழைத்து செல்லும் போது.. அதில் கைது செய்யப்பட்ட ஒரு நபர் நாடாளுமன்றத்தில் வெளியே செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று சரியாக இதே நாளில் நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர்.

இந்திய வரலாற்றில் அது மிகப்பெரிய கருப்பு நாள் ஆகும். அப்போதைய பாஜக அரசு மீது இதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. உலக நாடுகளையே இந்த தாக்குதல் திரும்பி பார்க்க வைத்தது.

இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர் . டிசம்பர் 13, 2001 அன்று உள்துறை அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றத்தின் அடையாள ஸ்டிக்கரின் போலி ஒட்டிய ஊர்தியில் ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.

இந்தியாவின் கருப்பு தினம் என்று அந்த நாள் அழைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலின் நினைவு நாள் இன்று. அதே நாளில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்களவைக்குள் 2 நபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளது புகை குண்டுகளை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகை ஏற்படுத்தும் குண்டுகளை அவர்கள் உள்ளே கொண்டு வந்துள்ளனர். மறைத்து வைத்து அவர்கள் கொண்டு வந்த குண்டுகளை அவைக்குள் தூக்கி எரிந்து உள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்களை கையில் கொண்டு வந்த அவர்கள் மக்களவைக்குள் புகுந்து கோஷங்களையும் எழுப்பி உள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...