காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் டெல்லி..! | நா.சதீஸ்குமார்
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான பிரிவில் (Very Poor Category) இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அண்மையில் டெல்லியின் காற்று தரக்குறியீட்டு அளவு மிக மோசமான நிலையை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் காற்று மாசுபாடு குறையாததால் பொதுமக்கள் சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் என பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததால் டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் வகுப்புகளை நடத்தும்படி பள்ளிகளுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான நிலையிலையே (Very Poor Category) இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.