புதுமைப் பெண்ணே !
பெண்ணே
நெஞ்சம் பதைபதைத்து
துடிக்கிறது
காமுகனை அணுஅணுவாய்
அடித்துக் கொன்றாலும்
ஆத்திரம் அடங்கப்
போவதில்லை
ஆனாலும் பெண்ணே
நீ விழித்துக்கொள்
மாய வார்த்தைகளில்
மயக்கம் கொள்ளாதே
பார்வையையும்
புத்தியையும்
கூர்மையாக்கு
பாதங்களின்
ஒவ்வொரு
அடியிலும்
தாய் தந்தையை சற்று
நினைத்துக் கொள்
பாவிகளின் உலகத்தில்
பத்திரமாய் இருந்து கொள்
பாரதி கண்ட
புதுமை பெண்ணாக
வாழ கற்றுக்கொள் பெண்ணே…