சென்னை மழை வெள்ளம் தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ..! | நா.சதீஸ்குமார்

 சென்னை மழை வெள்ளம் தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ..! | நா.சதீஸ்குமார்

சென்னை மாநகரில் அனைத்து இடத்திலும் மழை வெள்ள நீர் தேங்குவது ரொம்ப கேவலமான விஷயம்.. ஏன் வரி கட்டுறோம் என கேள்வி கேட்க வைக்காதீங்க.. எம்.எல்.ஏக்கள் இப்பவாவாது முகத்தை தொகுதி பக்கம் காட்ட வேண்டும் என நடிகர் விஷால் சென்னை மழை வெள்ளம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷால் இன்று வெளியிட்ட வீடியோ: எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். இப்ப பெய்யுற மழையால் முதல்ல நடக்கிற விஷயம் கரண்ட் ஆப் ஆயிடும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக தெருவுல தண்ணி தேங்க ஆரம்பிச்சிடும். அப்புறமாக இருக்கிற தண்ணி எல்லாமே வீடுகளுக்குள் புக ஆரம்பித்துவிடும்.

இப்ப நான் அண்ணா நகரில் தங்கிட்டு இருக்கேன். ஏன் வீட்டுலேயே 1 அடிக்கு வீட்டுக்குள் தண்ணி வந்துருச்சு. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் அப்புறம் யோசிச்சு பாருங்க.. இதே லோ லைன் ஏரியாவில் என்ன கதின்னு பாருங்க. 2015-ல் நடக்கும் போது எல்லோரும் இறங்கி பொதுமக்களுக்கு சேவை செஞ்சோம். இப்ப 8 வருஷம் கழிச்சு அதைவிட மோசமான நிலைமை இருக்கும் போது கேள்விக்குறியாக இருக்கிறது. வெள்ளம் தொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவித்த திட்டம் எங்கே என தெரியவில்லை… அந்த திட்டம் என்னாச்சு? எப்ப முடிச்சாங்கன்னு தெரியலை இது ஒரு விண்ணப்பம்தான். ஒரு ரிக்வெஸ்ட். ஒரு வாக்காளனாக கேட்கிறேன்.. நடிகனாக கேட்கவில்லை. எல்லா சென்னை தொகுதி எம்.எல்.ஏக்களும் தயவு செஞ்சு வெளியே வந்து நீங்க சரி பண்ணி கொடுத்தீங்கன்னா சரியா இருக்கும். பொதுமக்கள் சேவை செய்வதை விட்டுவிடுங்க.. அது அப்புறம். அந்தந்த் தொகுதி எம்.எல்.ஏக்கள் உங்க தொகுதியை வந்து வெளியே வந்து உதவி செஞ்சா பொதுமக்களுக்கு பாதுகாப்பாக, தன்னம்பிக்கையாக இருக்கும்.

ஏன் என் வீட்டுலயே சீனியர் சிட்டிசன்ஸ் எங்க அப்பா அம்மா இருக்காங்க .. ரொம்ப பயந்து போயிருக்காங்க.. அண்ணா நகரிலேயே 1 அடி தண்ணி வீட்டுக்குள் வந்தா எப்படி இருக்கும்? எல்லாருக்கும் இது பொதுவான பிரச்சனை. இது அரசியல் அல்ல. அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனம் அல்ல.

ஒரு சின்ன மழை என்றாலே தி.நகரில் மழை நிக்கும். ஆனால் இப்ப பார்த்தா எல்லா இடங்களிலும் தண்ணி தேங்கி நிற்பது என்பது தர்ம சங்கடமான, கேவலமான விஷயமாக நான் பார்க்கிறேன். இது தயவு செய்து உடனடி நடவடிக்கை என்ன எடுக்க முடியுமோ சென்னை மாநகராட்சி உடனே எடுக்கனும். சென்னை மாநகராட்சி ஆணையரும் ஊழியர்களும் இறங்கி வேலை செஞ்சா நல்லா இருக்கும். ஏன்னா டேக்ஸ் (வரி) கட்டுறோம். எதற்காக வரி கட்டுறோம்னு கேட்க வெச்சுடாதீங்க. யாருமே தொகுதி பக்கம் இந்த விஷயத்துக்காக எதிர்பார்ப்பாங்க. கண்டிப்பாக இந்த நேரத்தில எம்.எல்.ஏக்கள் முகம் தெரிஞ்சா நல்லா இருக்கும். இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...