எஸ். ஜி. கிட்டப்பா காலமான தினமின்று!..

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், கலையுலகில் தீண்டத் தகாததாகக் கருதப் பெற்ற நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்து, அன்றைய கர்நாடக இ​சையுலகில் புகழுடன் ​கொடிகட்டிப் பறந்தவர்க​ளை எல்லாம் இ​சையி​னைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைக்கு இழுத்து வந்த பெருமைக்குரியவர்தான் இந்த எஸ்.ஜி. கிட்டப்பா. இவ​ரைச் செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா என்றும் அ​ழைப்பாங்க.

இத்த​கைய ​பெரு​மைக்குரிய கிட்டப்பா 1906 –ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 – ஆம் நாள் செங்கோட்டையில் கங்காதரய்யருக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் பத்தாவது குழந்​தையாகப் பிறந்தார். இவருடன் பிறந்தோர் சுப்புலக்ஷ்மி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகிய ஒன்பது ​பேராவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ராமகிருஷ்ணன். வீட்டிலுள்ளோர் இவ​ரைச் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன் என்பதாகும். அந்தச் ​செல்லப் ​​பெய​ரே இ​சையுலக வரலாற்றில் கிட்டப்பா என்று நிலைச்சுபுடுச்சு. இவர் சினிமா நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் ஹஸ்பண்ட் என்பது அடிசினல் இன்ஃபர்மேசன்.

நல்ல புகழுடன் இருந்தவர் வாழ்க்கையில் யார் , யார் கண் பட்டதோ..எதிர்பாராத சில சூழல்கள், கிட்டப்பாவிற்கு ஏற்பட்ட சில தவறான நட்புகள், சில புதிய பழக்கவழக்கங்கள், ஆசை துணைவி பிரிதலால் 1933 –ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிட்டப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிற்று. கிட்டப்பா சென்னையில் டாக்டர் பி. ராமராவிடம் சிகிச்சை எடுத்துக் ​கொண்ட​போது, கிட்டப்பாவிற்கு குடல் வெந்திருப்பதும் ஈரல் சுருங்கியிருப்பதும் தெரிய வந்தது.

கிட்டப்பா ​சென்​னை மயிலாப்பூரில் தனி வீடெடுத்துத் தங்கி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். ​நோயின் ​ கொடு​மை​யைத் தாங்க முடியாத கிட்டப்பாவிற்கு என்ன தோன்றியதோ… ​தெரியவில்​லை… யாரிடமும் கூறாமல் ​சென்​னையிலிருந்து திடீரெனப் புறப்பட்டுச் செங்கோட்டைக்கு வந்து விட்டார். சிறிது காலம் கிட்டப்பா திருநெல்வேலியில் உள்ள மாமனார் வீட்டிலும் அதன்பின் சந்திர விலாஸ் மாடி அறையிலும் தங்கினார். (கட்டிங் கண்ணையா)

1933 – ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 –ஆம் நாள் கிட்டப்பாவிற்கு 27 -ஆவது வயது நிறைவு பெறும் நாள். அந்நாளின் நினைவாக கிட்டப்பா தமது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் திருநெல்வேலி இந்து கல்லூரிக்காக இலவச நாடகம் ஒன்​றை நடத்திக் கொடுத்தார். செப்டம்பர் மாதத்தில் கிட்டப்பா திருவாரூரில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மேடையில் மயங்கி வீழ்ந்தார். அத்தருணத்தில் கிட்டப்பாவின் காதல் ம​னைவியாகிய சுந்தராம்பாள் கூட அருகில் இல்லை. அன்று அவருடன் நாடகத்தில் நடித்தவர் பிற்காலத்தில் திரையுலக நடிகையாக விளங்கிய m.k. விஜயாள் ஆவார். மன​மொத்த தம்பதியாராக விளங்கிய கிட்டப்பா, சுந்தராம்பாள் இருவரும் இறுதிவ​ரை ஒன்று ​சேரமுடியாம​லே​யே ​போய்விட்டது. இதுதான் விதியின் ​கொடு​மை ​போலும்!…

உடல் நலக்​கேடு ஏற்பட்ட​போதும் கிட்டப்பா நாடகத்தில் நடிப்ப​தை மட்டும் விட்டுவிடவில்​லை. தன்னு​டைய ​நோ​யைத் தாங்கிக் ​கொண்டு ​தொடர்ந்து நடித்துக் ​கொண்​டே இருந்தார். அக்டோபர் மாதத்தில் திருமங்கலத்தில் இரண்டு இலவச நாடகங்களை நடத்திக் கொடுத்தார். அதோடு அவரது நாடக வாழ்வு நி​றைவிற்கு வந்தது.

கிட்டப்பாவிற்குக் கடுமையான வயிற்றுவலி. டாக்டர் அனந்த நாராயணன் சிகிச்சையளித்தார். சிறிது நிவாரணம் கிடைத்தது. முழு​மையாக உடல் சீராகவில்​லை. கிட்டப்பா சீரண சக்தியை இழந்து ​ ​பெருந்துன்பத்திற்கு உள்ளானார்.

1933-ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் 2 –ஆம் நாள், சனிக்கிழமை பகல் 12 மணிக்கு மீண்டும் கிட்டப்பாவிற்கு கடு​மையான வயிற்றுவலி ஏற்பட்டது. அந்தவலி எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படவில்லை. கிட்டப்பா​வை வயிற்றுவலி பாடாய்ப்படுத்தி முடிவில் அவரது உயி​ரையும் பறித்தது. 28 வயதுக்குள் தம் வாழ்க்​கைக் கணக்கை முடித்துக் கொண்டு கிட்டப்பா புறப்பட்டு விட்டார். அவரது வாழ்க்​கை எனும் நாடகத்தில் இறுதிக் காட்சி முடிந்து திரைச் சீலையும் வீழ்ந்தது!

by

சிறப்பு நினைவஞ்சலி By கட்டிங் கண்ணையா

😢

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...