வெளியானது இயக்குநர் ஹரி கூட்டணியில் விஷால் நடிக்கும் “ரத்னம்” படத்தின் பர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்

 வெளியானது இயக்குநர் ஹரி கூட்டணியில் விஷால் நடிக்கும் “ரத்னம்” படத்தின் பர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்

நடிகர் விஷால் சண்டைக்கோழி படத்துல போட ஆரம்பித்த சண்டை அவரோட 34வது படம் வரைக்கும் விடாமல் பல படங்களில் போட்டுக் கொண்டே இருக்கிறார்.

தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படத்தின் போஸ்டரிலேயே தலையை வெட்டி கையோடு வைத்திருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

சின்ன பட்ஜெட்ல எல்லாம் படம் எடுக்க அடுத்த 2 வருஷத்துக்கு யாரும் வராதீங்க என விஷால் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல சிறு பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் எல்லாம் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். நல்லா படம் எடுக்க தெரியாதவர்களும், நடிக்க தெரியாதவர்களும் சினிமா பக்கமே வராதீங்கன்னு யாராவது சொல்ல மாட்டாங்களா என ரசிகர்கள் விஷாலை பார்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

கையில் வெட்டிய தலையுடன் ரத்தம் தெறிக்க ரத்னம் பட போஸ்டரில் விஷால் காட்சி தருகிறார். ஹரி இயக்கத்தில் அவர் நடித்த தாமிரபரணி திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. அதெல்லாம் ஹரி பீக்கில் இருந்த சமயம். மீண்டும் விஷால் அவர் உடன் இணைந்த பூஜை படமே போனி ஆகவில்லை. இந்நிலையில், மறுபடியும் ஹரி கூட்டணியில் மன தைரியத்துடன் விஷால் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ரொம்பவே ரண கொடூரமாக வெட்டிய தலையுடன் மாஸாக போஸ் கொடுத்து நிற்கிறார் விஷால்.

ஆனால், அந்த வெட்டிய தலை யாருடைய தலை என ஜூம் செய்து பார்த்த ரசிகர்கள் குபீரென சிரித்து வருகின்றனர். அந்தளவுக்கு ஒரு எமோஷனலும் இல்லாமல் வெட்டிய தலை கண்ணை கூட மூடி காப்பாற்றாமல் செம கேஷுவலாக பார்க்கிறது. அந்த போட்டோவை பிளர் செய்திருந்தால் கூட அது யாருடைய தலையாக இருக்கும் என்கிற க்யூரியாசிட்டி படத்திற்கு பிளஸ் பாயின்ட்டாக இருந்திருக்கும் ஐடியா தெரியாத ஹரி, விஷால் என கிண்டல் அடித்து வருகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...