ஆணும் பெண்ணும் சமம் அல்ல…

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! 
(அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும்
அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)
மொழி;
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள
முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.
பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS);
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.
வாகனம் ஓட்டுதல்;
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது,
தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்” ஆகும்.
உதாரணமாக வாகனம் செலுத்தும் போதுஇசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை).

பொய்ப்பேச்சு;
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள். ) எ காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்:
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள். ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின்
மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது  ழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.
தேவைகள்:
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில்
பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை:
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்…
அவர்களால், அவர்களின் வேலையில் கவணம்
செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்;
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.
எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.
நடவடிக்கை;
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில்ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.
நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது, மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கருதுகிறோம். ஆனால், உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல, மூளையும் வித்தியாசப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதே அவர்கள் சொல்லும் காரணம்.
பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களைக் கொண்டதாக இருக்கிறது. முதல் மையம், உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இரண்டாவது மையம், மொழி வளத்துக்கானதாக உள்ளது. இது வார்த்தைகளையும் உரையாடல்களையும் கவனிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம், முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரைத் துல்லியமாக எடை போடும் தன்மை கொண்டது.
ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால் அவை வேறுவிதமாகச் செயல்படுகின்றன. ஒரு விஷயத்தை பெண் பேசுவது போல் ஆணால் விவரித்துக் கூற முடிவதில்லை. ஓர் ஆண், தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல மொழியால் விலாவரியாகக் கூற முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பு கொண்டு அவர் மனதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
ஆண்களின் மூளை அமைப்பு, கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம். ஆனால் பெண்ணின் மூளை அப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் பெரிதாக இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மட்டும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.
பெண்ணுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது. பெண்ணைப் பொறுத்தவரை, ஆண் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
அது போன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றிய சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே இரு தரப்புக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!