திருநங்கை

 திருநங்கை
திருநங்கை

மனித பிறப்பில் ஆண், பெண் என இரண்டு ஜாதிகள் உண்டு. ஆணும் பெண்ணும் அல்லாத இரண்டும் கலந்த குணாதிசயம், செயல்படுகளையுடைய பிறப்பு என கூறப்படுவது திருநங்கை பிறப்பாகும். இவர்களின் செயல்பாடுகள் செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தும் பெண்மையின் சுபாவத்தை ஒத்து போகும். 

 
இத்தகைய பிறப்புகளுக்கு ஜோதிட ரீதியான கிரக அமைப்புகளும் உள்ளன. சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டால் அந்த ஜாதகம் அலியாக பிறப்பான். சனியும் புதனும் இணைந்து இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர்  பார்த்து கொண்டாலும் அவன் அலியின் குணாதிசயங்களை ஒத்து இருப்பான். செவ்வாய் சூரியனுடன் சேர்ந்து ரிஷபம் துலாம்  போன்ற ராசிகளின் தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது சந்திரனின் அம்சம் பெற்றாலும் அந்த ஜாதகம் அலியாவான். 
 
மேலும் புதனுடைய வீடுகளாகிய, மிதுனம், கன்னி இந்த இரு வீடுகளில் ஒன்று லக்னமாகி புதன் லக்னத்துக்கு ஆறாம் வீட்டில்  இருக்க அந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதி லக்கினத்தில் இருக்க அந்த ஜாதகன் ஆண்மைக்குறைவு உடையவனாக அல்லது அலியாக இருப்பான் இதை அல்லாது ஆன்மீக சான்றோர்களும் ரிஷிகளும் பிறக்கும் வாரிசுகள் அலியாக பிறப்பதற்கு ஒரு சில  விளக்கங்களை கொடுத்துள்ளனர். 
 
தாம்பத்ய உறவில் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இணையும் வேளையில் ஆணை விட பெண் அதிக வலிமையுடையவளாக இருந்தால் அவளுக்கு பிறக்கும் குழந்தை பெண்குழந்தையாகவும், பெண்ணைவிட ஆண்  வலிமையுடையவனாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாகவும் ஆண் பெண் இருவருமே சம வலிமையுடையவர்களாக இருந்தால் அந்த சமயத்தில் உருவாகும் கரு அலி தன்மை உடையதாக பிறக்கும் என்று சொல்லி  உள்ளனர்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...