50% தேர்வு கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலைகழகம்..! | நா.சதீஸ்குமார்

 50% தேர்வு கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலைகழகம்..! | நா.சதீஸ்குமார்

அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வு கட்டணமாக ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டிய நிலையில், தேர்வு கட்டணமாக ரூ.2050 செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதே போன்று டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு ரூ.600 பெறப்பட்டு வந்த நிலையில் ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிரடியாக 50% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் 50% கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உடனடியாக இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...