அறன் வலியுறுத்தல்
அறன் வலியுறுத்தல்
பொருளையும் இன்பத்தைவிட அறம் வலிமை உடையது என்று சொல்லுதல்.
ஒளவையார் திருவெண்ணைநல்லூர் சடையப்பவள்ளல் அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது, உணவு சாப்பிட்டுக் கொண்டிருதார். போகிற வழியில் சரியாக உணவு அளிக்கிறார்களா என்று பார்வையிட வந்தார் சடைப்பவள்ளல்.
அப்பொழுது உணவு அருந்தி கொண்டிருந்த தமிழரசி “வள்ளலே எங்கள் எல்லோருக்கும் ஒரே விதமான உணவு அளிப்பதால், நாங்கள் பொறாமை இல்லாமலும், அறுசுவை உணவு வேண்டுமட்டும் தருவதால், போதும், போதும், என்று நாங்கள் ஆசை இல்லாது, கூறும் மொழியும், இல்லாததை அறிந்து இலையில் போடுவதால், நாங்கள் கோபமில்லாமல் மகிழ்ச்சியும், போடுகிறவர் குறிப்பறிந்து அளிப்பதால் நாங்கள் தீயசொற்கள் பேசாமல் இனிய சொல்லுடன் உண்கிறோம்ளூ இவ்விதம் நான்கு தீய குணங்களும் வரவொட்டாமல், அறம் செய்யும் தாங்களே வள்ளல்.” என்று புகழ்ந்தார் ஒளவையார்.
“அச்சமயம் செய்தாலும், நீங்கள் பொறாமை, ஆசை, கோபம் ஆகியவை இல்லாமல் அமைதியாக உண்டதால் எனது அறமும் சிறந்தோங்கி, நானும் வள்ளலாக விளங்குகிறேன்.” என்று பதிலளித்தார் சடைப்பவள்ளல்.
வள்ளுவரும் நாங்கள் விளக்கி செய்வது செய்வதே அறம் என்கிறார்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அழுக்காறு = பொறாமை
அவா வெகுளி = ஆசையும், கோபமும்
இன்னாச்சொல் = கொடியசொல்
நான்கும் = இந்நான்கினையும்
இழுக்கா = விலக்கி
இயன்றது = இடைவிடாமல் நடைபெற்றதே
அறம் = தர்மமாகும்
கருத்து : பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல், இவற்றை விலக்கி செய்வதேயாகும் அறமாகும்.