அடாவடி கேப்டன் மாயா! அதிரடி போட்டியாளரான அர்ச்சனா , விசித்ரா! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போதைய கேப்டன் மாயாவுக்கும் ஸ்மால்பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5 வாரங்களை கடந்து 6-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக மாயா பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், அவசரத்திற்கு நாப்கின் கூட தர முடியாதா? என்று விசித்ரா கேட்டுள்ளது பிக்பாஸில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த வாரம், மக்கள் ஆதரவு பெற்ற போட்டியாளராக வலம் வந்த பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது வேறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே பிக்பாஸ் வீட்டில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார் செய்த பெண் போட்டியாளர்களை கடுமையான விமர்சித்தார்கள் விசித்ரா மற்றும் அர்ச்சனா .நீங்கர் , ஒருவரின் வாழ்க்கையை வீணடித்துவிட்டீர்கள் என்று மாயா, ஜோவிகா, பூர்னிமா ஆகியோரை கடுமையாக தாக்கியும் பேசியிருந்தனர்.
இதற்கு பழி வாங்கும் வகையில் கேப்டனாக உள்ள மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது என்று அடவடியாக சொல்கிறார்.
விசித்ரா டூத் பிரஷ் கேட்க, கையால் விலக்குங்கள் என்று திமிராக சொல்லிவிட்டு சென்ற மாயா, தற்போது சானிட்ரி நாப்கின் கொடுக்கவும் முடியாது என்று அடவடியாக அராஜகமாக சொல்கிறார்.