ப்ரபல ஒடிடியில் ரத்தம்! | தனுஜா ஜெயராமன்
சி.எஸ்.அமுதன் இயக்கிய விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஓடிடி தளங்கள் கண்டுள்ள வளர்ச்சியால், பல புதுப்புது படைப்புகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் ரிலீஸான ஒரு மாதம் அல்லது அதற்கும் குறைந்த நாட்களில் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. ஒரு சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படம் தான் ரத்தம்.
தமிழ்ப் படம், தமிழ்ப் படம் 2 மூலம் தமிழ் சினிமாவை கலாய்த்த சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ரத்தம். இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தியேட்டரில் வெளியான போது கலவையான விமர்சனத்தை பெற்றது இந்த திரைப்படம். நல்ல வசூலையும் பெற்று தந்தது. இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து விஜய் ஆண்டனி தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ரத்தம் திரைப்படம் நவம்பர் 3 ஆம் தேதி அமேசான் ஃபிரைம் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.