கேரள மாநில சாதனைகளை விளக்கும் ‘கேரளீயம் 2023 ! | தனுஜா ஜெயராமன்
கேரள அரசு நடத்தும், கேரளீயம் 2023 நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது.
முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்த விழாவில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் இதுவரை படைத்த சாதனைகளை விளக்கும் வகையில், ‘கேரளீயம் 2023’ என்ற பெயரில் ஒரு வார காலம் விழாவை கேரள அரசு நடத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் துவங்கிய ” கேரளீயம்” விழாவின் நிகழ்வில் சில அழகிய காட்சிகள் கேமிரா கோணங்களில் சிக்கியது. அதில் சிறப்பு அழைப்பாளராக நம் உலக நாயகனும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், “என் வாழ்க்கைப் பயணத்தில் கேரளா முக்கியமான இடம். கேரளாவில் உள்ளவர்கள் எனது கலை வாழ்க்கையை எப்போதும் ஊக்கப்படுத்தியுள்ளனர். நான் எப்பொழுதும் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளவோ அல்லது அதிலிருந்து உத்வேகம் பெறவோ கேரளாவுக்கு வருவேன். எனக்கு ஏழெட்டு வயசு இருக்கும்போது முதல்முறையாக மலையாளப் படம் பண்ணினேன். என் அன்பான இயக்குனர் சேதுமாதவன் சாரின் முதல் படமும் அதுதான் என்று பேசியிள்ளார் கமல். அதே போல் இங்கு எடுக்கப்படும் படங்கள் எப்போதும் சமூகப் பிரச்சனைகளையே பேசுகிறது. இது போன்ற விஷயங்களில் கேரளாவின் சமூக ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வை பார்க்கமுடிவதாக தெரிவித்தார்.
நவ.,7 தேதி வரை திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு உட்பட மாநிலம் முழுதும் கலைநிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.