கீழடி பண்பாடு
2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி பண்பாடு
கீழடியில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டநான்காம் கட்ட அகழாய்வின் போதுசேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்கநாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில்அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனைஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டமாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில்இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல்தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல்,
இதுவரை தமிழ்-பிராமி எழுத்துவடிவத்தின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என அழகன்குளம், கொடுமணல், பொருந்தல்அகழாய்வுகளின்படி கருதப்பட்டுவந்தது.எனினும்,தற்போதுகிடைத்திருக்கும் கீழடிஅகழாய்வில்கிடைத்தஅறிவியல் ரீதியான காலக்கணிப்புக்கள் தமிழ்-பிராமியின் காலம்மேலும் நூறாண்டுகள் (கி.மு. 6-ஆம் நூற்றாண்டு)பழமை வாய்ந்தது என்னும் முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. எழுத்து பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைக்க பெற்றுள்ளதின் மூலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டளவிலேயே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளதை நிலைநிறுத்த முடிகிறது.
எழுத்தறிவு தொடங்கிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று இதுவரைகருதப்பட்டு வந்தது. இக்கருத்தாக்கதில் பெரும் மாற்றத்தை கீழடி ஆய்வு முடிவுகள் ஏற்படுதியுள்ளன என்றால் மிகையாகாது.திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கம் அகழாய்வில் கண்டறியப்பட்ட முதற்கட்ட பழையகற்கால காசுமோசெனிக்-நியூக்லைட்ட் எனப்படும் இயலுலக புவிபரப்பியல் ஒளி ஆய்வு செய்ததில் இக்கால முடிவுகள் பெறப்பட்டன எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று நுண்கற்காலத்தைச் சேர்ந்த கற்காலக் கருவிகள் திருநெல்வேலிப் பகுதியிலும்,வைகை மற்றும் குண்டாறு ஆற்று படுகைகளிலும்,புதியகற்காலப் பண்பாடுகளின்கருவிகள் தமிழகத்தின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கிடைத்துள்ளன. அதன் அடுத்தக் காலக்கட்டமான இரும்புக் காலத்தைச் சார்ந்த சேலம் வட்டாரத்திலுள்ள மாங்காடு மற்றும் தெலுங்கனூர் ஊரிகளிலுள்ள பெருங்கற்படைஈமச் சின்னங்களில் கண்டறியப்பட்ட மாதிரிகளிலிருந்து இரும்புக் காலம் கி.மு. 2000 என காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் முதுமக்கள்தாழி அகழாய்வில் இருந்து சேகரிக்கப்பட்ட கரிமம் காலக் கணக்கீடு செய்யப்பட்டதில் இதனின் காலம்கி.மு. 8-ஆம் நூற்றாண்டு என்று வரையரை செய்யப்பட்டுள்ளது. தற்போது கீழடி அகழாய்வில் சேகரிக்கப்பட்ட ஆறு கரிம பகுப்பாய்வுகளின் முடிவுகள் கீழடியின் காலம் கி.மு. 6-ஆம்நூற்றாண்டு என்று தெரிய வருகிறது.
அண்மைக்கால அகழாய்வுகளும், அறிவியல் ரீதியான காலகணிப்புகளும், தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 இலட்சம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும், தற்போதைய கீழடி ஆய்வுகள் மூலம் தமிழகத்தின் தொடக்க கால வரலாறு காலத்தில் ( கி.மு. 6-ஆம் நூற்றாண்டளவில் மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கி இருந்தனர் என்பது உறுதியாகிறது.கிடைக்கப் பெற்ற கரிமத்தின் காலம் கி.மு. 580என்று கணக்கீடு செய்யப்பட்ட ஆய்வறிக்கைகிடைக்கப் பெற்றுள்ளது.
இக்காலக்கணிப்பின்படி, கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.1-ஆம்நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்டபகுதியாக கீழடி விளங்கியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.இந்த ஆய்வு முடிவுகளைக் கவனமாகஆய்வு செய்த பிரபல தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா.இராஜன், பழந்தமிழரின்
தொன்மை தொடர்பாக இதுவரை நிலவி வந்த சில கேள்விகள் மற்றும் கருதுகோள்களுக்கு உறுதியான விடைகள் / சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன என்று கருதுகிறார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் நகரமயமாதல் கி.மு.3-ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் தொடங்கியது என இதுவரை கருதப்பட்டுவந்தது. ஆனால், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகளின் மூலம் வைகை நதிக்கரையில் நகரமயமாதல் கி.மு.6-ஆம் நூற்றாண்டிலிருந்து,தொடங்குகிறது என்பது தெளிவாகிறது
தொகுப்பு
ம.ஸ்வீட்லின்