கனவான அவள்

கனவான அவள்

———- —————–

அகன்ற என்

கைகளில்

பட்டாம் பூச்சியாய்

அவள்

அமர்ந்ததால்

மயிர் கூச்சரியும்

மகிழ்வு ..

நறுமணம் தாங்கிய

அவளின் வாசனை ,

கயிற்றின் மேல்

வித்தை காட்டும்

சிறுமியாக

 விழிகளை ஓட செய்கிறது ..

பக்கத்தில் அமர்ந்து

பார்க்காமல் இருந்தாலும்

வெப்ப காற்று உணர்த்தும்

அவள்

வெட்கத்தில் சிவக்கிறாள்

காதல் சத்தத்தில்

மொனிக்கிறாள்  என்று ….

முகிலின் மென்மையான

அவளின் இளமை

 மொழிவு தொடையில்

 விரல்களால் தீண்டும் போது

முறைத்தபடி  எதை தேடுகிறாய்

  எனும்போது  எனக்கு

அசடு வழிவது புதிதல்ல ….

கோபுர கலசத்தின் மீது

பனித்துளி வழுக்கி

விளையாடும் வித்தையாய்

துப்பட்டா காட்டும்

கண்ணாம்மூச்சி

கொஞ்சம் கிக் …

தெரிந்தும் வினை ஆற்றுவாள்

ஒரு அணைப்பு

ஒரு முத்தம்

இது  மொழி

எனக்கும் அவளுக்கும்

கனவுக்குள் வந்தவள்

கனவில் நின்றதால்

கனவு கனவானது

பட்டாம் பூச்சியின்

இறகு தடம் மட்டும்

இதயத்தில் தடமாக…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!