விழிப்புணர்வுபதிவு…

#தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்!

#பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்!

#காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்!

#நவதானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்…!

ஆக எது கெட்டுப்போகிறதோ!
புழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது வண்டு வைத்து குப்பைக்கு போகிறதோ!

அவை மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான #தீங்கில்லாத_உணவுப்பொருள்கள்….!!!

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் #எப்படிநல்லதண்ணீர்ஆகும்??

பழமுதிர் சோலைகளிலும் ரிலயன்ஸ் பிரஷ்களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல், அழுகாமல், இளமை மங்காது, பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள் நல்ல தரமான பொருட்களா??

இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து கெட்டுப்போகிறது…!!

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது, மணமாக விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகள் நல்ல பொருளா??

#இல்லவே_இல்லை…!

ரெடிமேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான் நஞ்சுதான்…!!!

டி.வி. விளம்பரம் பார்த்து எந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதைவிட மடமையும் முட்டாள்தனமும் வேறு எதுவுமில்லை…

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது, ஒரு பொழுது போக்கு சமூக கௌரவமாக மாறி விட்டது…
அதை விடக் கொடுமை..
நோயைப்பற்றி மெகா மருத்துவமனை சிகிச்சை அதன் செலவுகள் பற்றி உரத்து பேசுவதும் ஒரு சமூக கௌரவமாக கருதப்படும் அவலமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்….!!!

உணவு முறை, நோய், நலம், மருத்துவம், சமூகம்
பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம் வரை முறையற்ற நுகர்வு பண்பாடும் இதற்கு அடிப்படைக்காரணம்…!

#உண்மையை_உணர்வோம்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!