பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப் போவது இவரா? | தனுஜா ஜெயராமன்

 பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப் போவது இவரா? | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸில் சனிக்கிழமையான இன்று கமல் பல்வேறு பஞ்சாயத்துக்களை செய்வார். இந்த சீசனில் இதுவரை குறும்படம் ஏதும் போடப்படவில்லை. விஷ்ணுவின் அலப்பறைகளால் போட்டோ டாஸ்கில் அட்சயா தள்ளிவிட்டாரா? இல்லையா? என எழுந்த சந்தேகத்தை பிக்பாஸ் குறும்படம் போட்டு தீர்த்து வைப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த வாரம் நாமினேஷனில் 11 போட்டியாளர்கள் சிக்கி உள்ளார்கள். இதில் வழக்கம் போல அதிக வாக்குகளை பெற்று பிரதீப் டாப் லிஸ்டில் இருக்கிறார். இவரை தொடர்ந்து நிக்சன், மணிகண்டன், விஷ்ணு, ஜோவிகா, அக்ஷயா, மாயா போன்ற போட்டியாளர்களும் அடுத்தடுத்த இடத்தினை பிடித்திருக்கிறார்கள். கடைசி நான்கு இடத்தில் கூல் சுரேஷ், யுகேந்திரன், விக்ரம், வினுஷா ஆகியோர்கள் உள்ளனர்.

அதனால் இந்த வாரம் கடைசி இடத்தில் உள்ள சீரியல் நாயகி வினுஷா வெளியேறப் போகிறார் என சொல்கிறார்கள். இவர் தான் பிக் பாஸில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார் அதோடு மட்டுமல்லாமல் பெரிதாக எந்த சுவாரசியம் இல்லாத போட்டியாளராகவும் இருந்து வருவதனால் இவர் வெளியேறினால் நன்றாக இருக்கும் என மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதனால் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வினுஷா வெளியேறுவது தான் உறுதி என ஆருடங்களை அளித்து வருகிறார்கள் பிக்பாஸ் ரசிக பட்டாளங்கள். அந்த வகையில் தற்பொழுது ஓட்டிங் லிஸ்ட் ரிசல்டும் வெளியிட்டு வருகிறார்கள்.
என்ன நடக்கப் போகிறது என பார்க்கலாம். ஆனால் கமல் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று எதாவது டிவிஸ்ட் வைக்கவும் வாய்ப்புள்ளது என்றும் சொல்கிறார்கள்.

வீட்டில் மரியாதையென்பது மருந்துக்கும் இல்லை. சரமாரியான கெட்டவார்த்தைகள், விதிமீறல்கள் , எல்லோரும் கன்டன்ட் என சொல்லி விட்டே செய்வது சுவராஸ்யத்தை குறைத்து விடுவது, நான் செம்மையா கேம்விளையாடுறேன்னு அவங்களே சொல்லிக் கொள்வது என இதைபற்றியெல்லாம் ஏதேனும் பஞ்சாயத்து செய்வாரா ஆண்டவர்… என பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...