பெரும் தொகையை கொடுத்து ‘சித்தா’ படத்தை கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்…

 பெரும் தொகையை கொடுத்து ‘சித்தா’ படத்தை கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்…

சித்தா ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்துவரும் சித்தார்த் ஒரு மெகா ஹிட் கிடைத்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான டக்கர் படமும் தோல்வியையே சந்தித்தது. சூழல் இப்படி இருக்க அவர் இப்போது சித்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தை அருண்குமார் இயக்க நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சித்தா திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இயக்குநரின் மேக்கிங் ஒருபுறம் சிறப்பாக இருக்க சித்தார்த்தின் நடிப்பு மறுபக்கம் அட்டகாசமாக இருக்கிறது என்று புகழ்ந்த ரசிகர்கள் இது கண்டிப்பாக சித்தார்த்தின் பெயர் சொல்லும்படியான படம் என்று கூறினர்

சித்தா படத்துக்கு சாமானிய ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். அதன்படி கமல் ஹாசன் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இறுதியில் அழுத்தத்துடன் ரசிகர்கள் வெளியே வராமல் இப்படி நடக்கிறது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது. மகாநதி படத்தைவிட இது நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதேபோல் இயக்குநர் மணிரத்னமும் சித்தா படத்தை பாராட்டியிருக்கிறார்.

இப்படி விமர்சன ரீதியாக படம் கொண்டாடப்பட்ட அதேவேளையில் வசூல் ரீதியாகவும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. அதாவது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் சித்தார்த் ரொம்பவே ஹேப்பியாக இருக்கிறார்.இந்த உற்சாகம் அவரை இதுபோன்ற சிறந்த படங்களை தயாரிக்கும் உத்வேகத்தை கொடுக்கும் என்றும் ரசிகர்கள் கூறினர்.

ந்நிலையில் சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது படத்துக்கு கிடைத்த செம ரெஸ்பான்ஸை அடுத்து சித்தா படத்தை வாங்குவதற்காக ஓடிடி நிறுவனங்கள் கடும் போட்டியில் குதித்தனவாம். இறுதியாக பெரும் தொகையை கொடுத்து ஹாட்ஸ்டார் நிறுவனம் ஓடிடி நிறுவனம் கைப்பற்றிவிட்டதாகவும்; சேட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சித்தா படம் ஓடிடியில் ஆயுத பூஜைக்கு ரிலீஸாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...