அர்ஜூன் மகள் மற்றும் தம்பி ராமையா மகன் இருவரின் நிச்சயதார்த்த விழா! ! தனுஜா ஜெயராமன்

 அர்ஜூன் மகள் மற்றும் தம்பி ராமையா மகன் இருவரின் நிச்சயதார்த்த விழா! ! தனுஜா ஜெயராமன்

அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் மிகவும் எளிமையாக தம்பி ராமய்யா மகன் உமாபதி மற்றும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்துள்ளது.

அர்ஜுன் தொகுத்து வழங்கிய, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தம்பி ராமய்யா மகன் உமாபதிக்கும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாகமாறியது . இதை தொடர்ந்து இரு வீட்டு பெற்றோரும் , இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட தை மாதம் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக, சமீபத்தில் தம்பி ராமையா தெரிவித்திருந்தார்.

இருவீட்டு குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடக்கும் என்றும் அதில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ஆனியன் பிங்க் நிற பட்டு சேலையில் அழகு தேவதை போல் ஜொலிக்கிறார். உமாபதி மணப்பெண்ணுக்கு மேட்சிங்கா உடை அணிந்துள்ளார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...