சனிக்கிழமை கமலின் பஞ்சாயத்து ஆச்சே … இந்த வாரம் வெளியேற போவது யார்? | தனுஜா ஜெயராமன்

 சனிக்கிழமை கமலின் பஞ்சாயத்து ஆச்சே … இந்த வாரம் வெளியேற போவது யார்? | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் மூன்றாவது வாரம் முடிவடையும் நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் குறித்த யூகங்கள் வெளியாகி உள்ளது.

இந்த வாரம் நிக்சன், அக்ஷயா உதயகுமார், மணிச்சந்திரா, விசித்ரா, ஐஷு, விஜய் வர்மா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா ரவி, வினுஷா, சர்வணா விக்ரம் மற்றும் பிரதீப் ஆண்டனி உட்பட 11 போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

முதல் வாரமே விஜய் தனது முஷ்டியை மடக்கி பிரதீப்பை குத்துவேன் என்றும், வெளியில் வந்தால் என் நண்பர்களை வைத்து ஒரு கை பார்ப்பேன் என்று மிரட்டும் தோனியிலும் சொன்னதால்தான் கமல்ஹாசனிடமிருந்து ஸ்டிரைக் கார்டு வாங்கினார். நேற்றைய போட்டிக்குப்பிறகு விஜய் மீண்டும் ஸ்டிரைக் கார்டு வாங்கலாம், அல்லது விஜய் எலிமினேட்கூட ஆகலாம்.

பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களிப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், பிரதீப் மக்கள் ஆதரவு அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.

இந்த வார வாக்குகள் அடிப்படையில், விஜய், வினுஷா மற்றும் பூர்ணிமா ஆகியோர் கடைசி மூன்று இடங்களில் இருந்தபோது, பூர்ணிமா இந்த வாரம் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.

பிக்பாஸ் வந்ததிலிருந்து சும்மாவே இருக்கும் வினுஷா கன்பஷன் ரூமில் வீட்டுக்கு போறேன் என அழுகிறார். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வினுஷா வெளியேற்றப்படுவார் என்று ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த வார இறுதியில் பிக் பாஸ் தமிழ் 7 ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்த உள்ளது. கமல் என்ன சொல்கிறார் பார்க்கலாம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...