சென்னிமலை விவகாரம் சர்ச்சையாக பேசிய கிறித்தவ முன்னணியை சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது !
சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறித்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு எனும் இடத்தில ஜான் பீட்டர் என்பவர் நிலம் வாங்கி, மத போதனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் சென்னிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதில், ஜான் பீட்டர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாக்குதல் சம்பவத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர்.
மேலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சென்னிமலை காவல்துறையினரால் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவதூறாக பேசி நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஜோசப் சரவணன் என்பவரை சென்னிமலை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.