அரபிக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தம்…
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பழுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை விடை பெற்ற நிலையில் மக்கள் வடகிழக்கு பருவமழையை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். வடகிழக்கு பருவமழை வரும் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு கேராள மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் திருவனந்தப்புரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்திலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் மாநிலங்களில் மழை பெய்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகரும் என்றும் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 21 ஆம் தேதி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.