கண்டன்ட் தேடும் போட்டியாளர்கள்… எரிச்சலாகும் பார்வையாளர்கள ! | தனுஜா ஜெயராமன்

 கண்டன்ட் தேடும் போட்டியாளர்கள்… எரிச்சலாகும் பார்வையாளர்கள ! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்குகள் ஒரு பக்கம் குழுவாக சேர்ந்து விளையாடுவதை வாடிக்கையாக கொள்கிறார்கள் . தனி கேங்க் உருவாக்குவது  எனப் பிரிந்து ஹவுஸ் மேட்டுகள் செய்யும் ரகளைகள் ஒரு பக்கம் அலப்பறைகளால் நிரம்பி வழிகிறது.

பிக்பாஸ் வீட்டில் அதிகம் பேசு பொருளாகப் பிரதீப் ஒரு வியூகத்துடன் செயல்படுகின்றார் என்பதை அனைவருமே கவனித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் தினசரி பரபரப்பு  அதிகமாக இருக்கும். பிரதீப் ஆண்டனி தான் ஒரு சிறந்த அறிவாளி என்று பில்டப் கொடுத்து தனக்கென தனிபாணியை கடைபிடித்து அந்த வீட்டில் செயல்படுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரை மற்றவர்கள் கணிப்பது கடினமாக உள்ளது.

இன்று நடைபெற்ற டாஸ்கில் விஷ்ணு மணி சந்திராவை தோற்கடிக்க சின்ன பாஸ் வீடு வெற்றி பெற்றது.

அடுத்த டாஸ்கில் ஆடிய ப்ரதீப் கூல் சுரேஷிடம் தோற்க பெரிய பாஸ் வீடு வெற்றி கொள்கிறது. வீடு பெருக்கி க்ளீன் செய்ய பெரிய பாஸ் டீமும் , பாத்ரும் கழுவ சின்ன பாஸ் டீமும் வேறுவழியில்லாமல் ஆயத்தமாகிறது.

மாயா பூர்ணிமா காஸிப் பேசுவதை தினப்படி டாஸ்காக வைத்து விளையாடி வருகிறார்கள். இருவருமே நாமினேஷன்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இதனையே தங்கள் ஸ்டேடர்ஜியாக வைத்து செயல்படுவதாக தெரிகிறது. எப்போதுமே ஓவராய் கண்டன்ட்க்காக அலைவது பார்வையாளர்களுக்கே எரிச்சலாக வருகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...