பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற வாய்ப்பு அதிகம் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

 பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற வாய்ப்பு அதிகம் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைப்பெற்றது. இதில், பிக்பாஸில் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படும் சிலர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். சின்ன பாஸ் வீட்டில் ஆறு பேர் ப்ளான் செய்து ஆறு பேரை நாமினேஷனில் குத்தியுள்ளனர்.

நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் இவர்கள் தான் மாயா, மணி, அக்‌ஷயா, வினுஷா, நிக்ஸன், விஜய், பிரதீப், விசித்ரா, சரவண விக்ரம், ஐஷூ, மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோர் இந்த வாரத்தில் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரியும்.

பிக்பாஸ் இல்லத்தில் கண்டன்டிற்காக என்றே பலர் சில வேலைகளை பார்க்கின்றனர். ஹிட் லிஸ்டில் மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் உள்ளனர். பிக்பாஸ் போட்டியாளர்களில் பிறரை பற்றி பின்னால் பேசும் ‘காசிப் தோழிகளாக’ இருவரும் வலம் வருகின்றனர். இவர்களில் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தாண்டி, பிறரை கொஞ்சம் கடுப்பேற்றும் போட்டியாளராக இருப்பவர், பிரதீப். இவரும் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பார்க்கலாம் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற வாய்ப்பு அதிகம் என்று என பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகிடக்கின்றனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...